நூல் வெளியீட்டு விழா
- Home
- நூல் வெளியீட்டு விழா
நமது மீனாக்ஷி ரோட்டரி சங்கமும், மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கமும் (MBA) இணைந்து நடத்தும் நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைத்து ரோட்டரி உறுப்பினர்களும் வந்திருந்து சிறப்பு செய்யக் கேட்டுக் கொள்கிறேன். இளம் ரோட்டரி உறுப்பினர் மு. செல்வக்குமார் அவர்கள் சிரத்தையுடன் எழுதிய ஹைக்கூ கவிதை நூல் இது. பல பரிமாணங்களைக் கொண்ட செல்வக்குமார் இன்னும் பல உயரங்களை வாழ்வில் எட்ட நம் வாழ்த்து அவருக்குத் தேவை. தவறாமல் 24.9.204 (செவ்வாய்) மாலை 4.45 மணிக்கே வருக, வருக என்று அன்புடன் வேண்டுகிறேன். நூல் வெளியீட்டில் வரும் தொகையை மதுரை புதுப்பட்டி தொழு நோயாளிகள் முகாமிற்கு அத்தியாவசிய தேவைகள் செய்து தர திட்டமிட்டுள்ளோம். அதனால் ரோட்டரி உறுப்பினர்கள் அனைவரும் இந்நூலை அதிக அளவில் வாங்கி இத்திட்டத்திற்கு உதவிட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.;